திருப்பூர்:திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் அறிக்கை:விவேகானந்தர் பிறந்த தினம், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஜன., 5 முதல், 8 வரை போட்டி நடத்தப்படுகிறது.இதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான போட்டி, 29 மற்றும் 30ல் மெய்நிகர் முறையில் நடக் கிறது.இதில், 15 முதல், 29 வயதுடைய இருபாலரும் தனிநபர், குழு போட்டியில் பங்கேற்கலாம். இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சிக்கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு உள்ளிட்டவற்றில் தங்கள் திறமையை நிரூபித்து, நல்ல தெளிவான ஒலி,ஒளி அமைப்புடன் வீடியோ பதிவு செய்ய வேண்டும். உறுதிமொழி படிவம், வயது சான்றிதழ் வீடியோவுடன் இணைக்க வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும் இப்போட்டியில் பங்கேற்க முடியும். டிச., 30 ம் தேதி மாலை, 5:00 மணி வரை வரும் வீடியோ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 74017 03515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE