திருப்பூர்:திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால், நடுவழியில் பஸ்ைஸ நிறுத்திய டிரைவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர், ராஜ்குமார், 34. அரசு பஸ் டிரைவர். நேற்று காலை கோபியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் (டி.என்.33.என்.3272) இயக்கினார். காலை, 6:10 க்கு கோபியில் புறப்பட்ட பஸ், 7:15க்கு திருப்பூர் - கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் வந்தது.அங்கிருந்து பயணிகளை அழைத்து தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ராஜ்குமாருக்கு வயிறு வலியால், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்நிலையை உணர்ந்த ராஜ்குமார் தாராபுரம் ரோட்டில் ஒரு ஓரத்தில் பஸ்சை நிறுத்தினர்.அதே பஸ்சில் பயணித்த, அரசு பஸ் டிரைவர் தங்கவேல், 38 என்பவர், பஸ்ஸை, அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓட்டி சென்று, ராஜ்குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சேர்த்தார்.டிரைவர் ராஜ்குமார் கூறுகையில், ''13 வருஷமா பஸ் ஓட்டுறேன். வயிறு வலியால், கஷ்டப்பட்டேன். பயணிகளுக்கு எதுவும்ஆகக்கூடாது என்றுதான் பஸ்சை அப்படியே நிறுத்தி விட்டேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE