பொது செய்தி

தமிழ்நாடு

கடைமடை எட்டிய பி.ஏ.பி., தண்ணீர்

Added : டிச 26, 2020
Share
Advertisement
திருப்பூர்:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, கடை மடைக்கும் சென்றடைந்துள்ளதால், விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, இறுதிச் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, பி.ஏ.பி., பாசனத் திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில்
 கடைமடை எட்டிய பி.ஏ.பி., தண்ணீர்

திருப்பூர்:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, கடை மடைக்கும் சென்றடைந்துள்ளதால், விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, இறுதிச் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, பி.ஏ.பி., பாசனத் திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இச்சுற்றில், 12 நாட்கள், அணையில் இருந்து, 800 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பரவலாக மழை பெய்ததால், இந்த முறை தண்ணீர் திருட்டு, கால்வாய் உடைப்பு போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கடை மடை பகுதிகளுக்கும், பி.ஏ.பி., தண்ணீர் சென்றடைந்துள்ளது. திருப்பூர் அடுத்த பொல்லிக்காளிபாளைத்திற்கு தண்ணீர் சென்றுடைந்து உள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X