பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் பலி வாங்கும் படுகுழி: விபத்துக்கு முன் சீரமைக்கலாமே!

Added : டிச 26, 2020
Share
Advertisement
பல்லடம்:- பூமலுார் செல்லும் ரோட்டில் ஏற்பட்டுள்ள படுகுழி, தவறி விழுந்தால் உயிர் பலியாகும் அபாய நிலையில் உள்ளது.பல்லடத்தை அடுத்த நடுவேலம்பாளையத்தில், பூமலுார், சோமனுார் செல்லும் ரோடு உள்ளது. சோமனுாரை இணைக்கும் வழித்தடம் என்பதால், எண்ணற்ற சரக்கு வாகனங்கள், வேன்கள், மணல் லாரிகள் சென்று வருகின்றன.இதுதவிர, தொழிலாளர்கள் பலரும் டூவீலரில் செல்கின்றனர். போக்குவரத்து
 உயிர் பலி வாங்கும் படுகுழி: விபத்துக்கு முன் சீரமைக்கலாமே!

பல்லடம்:- பூமலுார் செல்லும் ரோட்டில் ஏற்பட்டுள்ள படுகுழி, தவறி விழுந்தால் உயிர் பலியாகும் அபாய நிலையில் உள்ளது.பல்லடத்தை அடுத்த நடுவேலம்பாளையத்தில், பூமலுார், சோமனுார் செல்லும் ரோடு உள்ளது. சோமனுாரை இணைக்கும் வழித்தடம் என்பதால், எண்ணற்ற சரக்கு வாகனங்கள், வேன்கள், மணல் லாரிகள் சென்று வருகின்றன.இதுதவிர, தொழிலாளர்கள் பலரும் டூவீலரில் செல்கின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் படுகுழி ஒன்று வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகிறது.நடுவேலம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள இந்த படுகுழியில் வாகன ஓட்டிகள் பலர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது:தொடர் மழை காரணமாக ரோடு கரைந்து படுகுழி ஏற்பட்டது. இதே பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழியும் அரைகுறையாக மூடப்பட்டது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர், குழியில் நிரம்பி உள்ளது. இது தெரியாமல், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.நாளுக்கு நாள் பெரிதாகி வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் கசிவை சரி செய்து, ரோட்டையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X