திருப்பூர்;பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வக உபகரணங்கள் அடிக்கடி களவு போவதாக புகார் எழுந்துள்ளது.சில பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் உபகரணங்கள் அடிக்கடி களவு போகிறது. உயர் மின் அழுத்தத்தால் சேதமடைந்தும் வருகின்றன.இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழுவினை அமைக்க வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:அக்குழுவில் கணினி ஆசிரியர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை கையாளும் போதும், நிறைவடையும்போதும், ஆசிரியர்கள் பதிவு செய்யும் வகையில் பதிவேடு ஒன்று பேணப்பட வேண்டும்.ஆய்வக அறையில் மின்சார இணைப்புகள் உறுதியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மின் கசிவு போன்ற நிகழ்வுகளால் ஆய்வகம் சேதமாகாமல் தடுக்க, அவ்வப் போது மின் இணைப்பு களை உரிய பணியாளரை கொண்டு சரிபார்த்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.தேவைப்படும் இடங்களில் கிரில் கேட் அமைக்கவும், ஆய்வகங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அந் தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ளவும், பொறுப்பேற்பது அவசியம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE