கோவை:'கொரோனா' தொற்று கட்டுக்குள் இருப்பதாக ஒருபுறம் கூறினாலும், ஐகோர்ட் உத்தரவை மீறி, தகர ஷீட்டுகளால் மறைப்பு ஏற்படுத்துவதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் தொடர்கிறது.கொரோனா தொற்று பரவிய காலத்தில், மற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, நோயாளிகளின் வீடுகளில் 'தனிமைப்படுத்திய வீடு' என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.அதிக நோயாளிகள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தகர ஷீட்டால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது.கம்பெனிகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல், செயல்பட ஆரம்பித்து விட்டன. இனியும் தனிமைப்படுத்திய பகுதி என கூறி, மறைப்பு ஏற்படுத்தக் கூடாதென, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
இதை மீறும் வகையில், கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில், ஒரு மளிகை கடை, ஒரு டீக்கடை, ஒரு வீட்டை சுற்றிலும் தகர ஷீட்டால் மறைப்பு ஏற்படுத்தி, தனிமைப்படுத்திய பகுதி என, மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டவோ, மறைப்பு ஏற்படுத்தவோ கூடாதென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் நகரில் உள்ள மறைப்பை உடனடியாக அகற்ற, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE