சிவகங்கை:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது என மக்களே முடிவு செய்துவிட்டனர். ஏன் அவரின் ஜாதகம் கூட அதை தான் சொல்கிறது,'' என சிவகங்கையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., மகளிரணி தலைவி வானதி, முதலில் பதவி ஏற்கும் போது வேலுநாச்சியாரை வணங்கித்தான் பணியை துவக்கினார். பள்ளி பாடபுத்தகத்தில் வேலுநாச்சியார், சோழர் பற்றிய வரலாறு இல்லை. பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தயாரித்து வருகிறோம். அதில் தமிழகத்தை சேர்ந்த மன்னர், வீரதீரத்தில் ஈடுபட்டவர்களை பாட திட்டத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கப்படும்.
மக்களை சந்திக்க ஸ்டாலின் எதுவானாலும் செய்யட்டும். மக்கள் முடிவு செய்துவிட்டனர் அவர் முதல்வர் ஆகப்போவதில்லை. அவரது ஜாதகத்தில் கூட இல்லை. அழகிரி நேரடியாக அரசியலுக்கு வந்தால் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். 2020 மார்ச் முதல் நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. தொடர் நடவடிக்கையால் இந்தியா கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE