பழநி:கொரோனா ஊரடங்கால் பழநி மலைக்கோயிலில் நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை அரசு வழிகாட்டுதல்படி டிச.,28 காலை 9:30 மணி முதல் இயக்கப்பட உள்ளது.
அதன்பின் தினமும் காலை 7:00 முதல் மதியம் 1:30 மணி வரையும், மதியம் 2:30 முதல் இரவு 7:30 மணி வரையும் இயக்கப்படும். tnhrce.gov.in வலைதளத்தில் கட்டண தரிசனம், இலவச தரிசன முன்பதிவு செய்தவர்கள் ரோப்காரில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்முன்பதிவு தரிசன சீட்டு, அடையாள ஆவண சரிபார்ப்புக்கு பின் மலைக்கோயில் சென்றுவர ரூ.100க்கு டிக்கெட் பெறவேண்டும். நாள் ஒன்றுக்கு 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள், 60 வயதிற்கு மேற்பட்டோர், நோய் பாதித்தோர் ரோப்கார் வசதி பெற தரிசனத்திற்கு ஒருநாள் முன்னதாக 04545--242683 என்ற எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 வரை பதிவு செய்யலாம். நாளொன்றுக்கு 200 பேர் அனுமதிக்கப்படுவர். மாற்று திறனாளிகள் தவிர மற்றவர்கள் கட்டண டிக்கெட் பெறவேண்டும்.அரசு வழிகாட்டல்படி பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் அனுமதி இல்லை. ரோப்காரில் முகக்கவசம் அணிய வேண்டும், என செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE