மதுக்கரை:கோவை அருகே கத்தியை காட்டி மிரட்டி, பல லட்சம் ரொக்கத்துடன் காரை கடத்திய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
கோவை --- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், நவக்கரை அருகே ஒரு கார் கேரளா நோக்கி சென்றது. காரின் பின்னால் வந்த பொலேரோ ஜீப் மற்றும், 'ஸ்விப்ட்' காரில் வந்தவர்கள், காரை வழிமறித்து நிறுத்தினர். காரிலிருந்த இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கீழே தள்ளி தாக்கினர். தொடர்ந்து, காரை கடத்திச்சென்றனர்.இருவரும் அவ்வழியே வந்தவர்கள் உதவியுடன், க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தகவல் தெரிவித்தனர்.
ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி, நரேந்திரன் நாயர், ரூரல் எஸ்.பி., அருளரசு சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.விசாரணையில், கேரள மாநிலம், மலப்புரம், பூக்கோட்டூரை சேர்ந்த அப்துல் சலாம், 50, சம்சுதீன்,42 என தெரியவந்தது. அப்துல்சலாம், ரியல் எஸ்டேட், தங்கம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் டிரைவர் சம்சுதீனுடன் பெங்களூருவுக்கு தங்கம் எடுத்துச் சென்றுள்ளார். இரவு அங்கிருந்து பல லட்சம் ரொக்கத்துடன் மலப்புரம் புறப்பட்டுள்ளனர்.
நவக்கரை அருகே வந்தபோது, ஐந்து பேர் கும்பல், ரொக்கத்துடன் காரை கடத்தியுள்ளனர்.பேரூர் டி.எஸ்.பி, சீனிவாசலு தலைமையில் தனிப்படையினர், கடத்தல் கும்பலை தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE