சேலம்:தமிழகத்தில், இரண்டாம் நிலை நுாலகர் எட்டு பேர், தகுதி, பணிமூப்பு அடிப்படையில், முதல் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவர்களில் நான்கு பேர், நுாலக ஆய்வாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நுாலக இயக்குனர் நாகராஜமுருகன், நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார்.அதன்படி, கரூர் சிவக்குமார், ஈரோடுக்கும், கிருஷ்ணகிரி மாதேஸ்வரன், தர்மபுரிக்கும், சேலம், பாலசுப்ரமணியம், பொள்ளாச்சிக்கும், மதுரை சீதாலட்சுமி, சிதம்பரத்துக்கும், முதல்நிலை நுாலகராக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வேலுார் சந்திரசேகரன் - தர்மபுரி; சேலம் வசந்தமல்லிகா - நீலகிரி; சென்னை முருகன் - சேலம்; சென்னை சுசீலா - காஞ்சிபுரத்துக்கு, பதவி உயர்வு மூலம், நுாலக ஆய்வாளர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE