பெருமாள் சொர்க்கவாசல் தரிசனம்: கோவிந்தா கோவிந்தா முழக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் சொர்க்கவாசல் தரிசனம்: 'கோவிந்தா கோவிந்தா' முழக்கம்

Added : டிச 26, 2020
Share
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர்.வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கடந்த, 15ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் துவங்கியது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை, பாடி சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, பெருமாளை
 பெருமாள் சொர்க்கவாசல் தரிசனம்: 'கோவிந்தா கோவிந்தா' முழக்கம்

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர்.வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கடந்த, 15ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் துவங்கியது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை, பாடி சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, பெருமாளை தரிசித்தனர்.முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அனைத்து கோவில்களிலும் நடந்தது. கோவிந்தா கோஷம் முழங்க, சொர்க்க வாசல் வழியாக சென்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில், திருவீதியுலா வந்த சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர்.சவுந்திரராஜப்பெருமாள் கோவிலில், நேற்றுமுன்தினம் முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி நம்பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சீனிவாச பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பள்ளபாளையம், உடுமலை திருப்பதி கோவில், ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவில், சன்னதியில், சொர்க்க வாசல் திறந்து, ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி ரங்கமன்னார், ஆண்டாள் நாச்சியாருடன், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசிக்காக, பக்தர்கள், விரதமிருந்து, கோவில்களில், வழிபாடு செய்தனர். சொர்க்க வாசல் திறப்புக்கு பின்னர், அனைத்து கோவில்களிலும், ராப்பத்து, சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X