வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுரை

Added : டிச 26, 2020
Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட, கோடங்கிபாளையம் ஊராட்சியில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டப்படும் தரைமட்ட தொட்டியை, மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.அங்குள்ள, ரேஷன் கடைக்கு சென்று, மக்களிடம் அனைத்து பொருட்களும் சரியாக கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க வேண்டும், தேவையான பொருட்களை இருப்பு வைத்து
 வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுரை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட, கோடங்கிபாளையம் ஊராட்சியில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டப்படும் தரைமட்ட தொட்டியை, மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.அங்குள்ள, ரேஷன் கடைக்கு சென்று, மக்களிடம் அனைத்து பொருட்களும் சரியாக கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க வேண்டும், தேவையான பொருட்களை இருப்பு வைத்து பொதுமக்களுக்கு தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும், என, ரேஷன் கடை விற்பனையாளரை அறிவுறுத்தினார்.செட்டியக்காபாளையம் ஊராட்சியில் கட்டப்படும், ஊராட்சி அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார். தேவணாம்பாளையத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில், மண் வரப்பு அமைக்கும் பணியை பார்வையிட்டார்.சூலக்கல் ஊராட்சியில், 71 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தை ஆய்வு செய்தார். ஊராட்சிகளில் நடந்து வரும் அனைத்து வளர்ச்சி பணி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் முனிராஜ், தாசில்தார் ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாய்ராஜ் சுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X