பொது செய்தி

தமிழ்நாடு

கணவருடன் கர்ப்பிணி தற்கொலை: திருப்பூர் அருகே சோகம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அருகே, கர்ப்பிணி பெண்ணும், கணவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.ஈரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன், 31. அவரது மனைவி கவிதா, 21. இருவருக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டாகிறது.திருப்பூர் அருகே கணக்கம்பாளையம், மீனாட்சி நகரில் தங்கியிருந்தனர். பாலமுருகன் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கவிதா எட்டு மாத

திருப்பூர்:திருப்பூர் அருகே, கர்ப்பிணி பெண்ணும், கணவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஈரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன், 31. அவரது மனைவி கவிதா, 21. இருவருக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டாகிறது.திருப்பூர் அருகே கணக்கம்பாளையம், மீனாட்சி நகரில் தங்கியிருந்தனர். பாலமுருகன் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கவிதா எட்டு மாத கர்ப்பிணி.நேற்று காலை பாலமுருகன் வீடு திறந்த நிலையில் இருந்தது. நீண்ட நேரம் இருவரையும் காணவில்லை.

அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் சேலையில் துாக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர்.பெருமாநல்லுார் போலீசார் சடலங்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.போலீசார் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X