உடுமலை:வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், உடுமலை பகுதியில் நடப்பாண்டு திட்டம் துவக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் பசுமை அமைப்புகள் ஆர்வம் காரணமாக, 60 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், 'வனத்துக்குள் திருப்பூர்-6' திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று, அமராவதி, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில், மலையடிவாரத்தில், தேவசிகுட்டி ஜோஸ்க்கு, சொந்தமான விவசாய நிலத்தில், தேக்கு, பலா, புன்னை என, 296 நாற்றுக்கள் நடப்பட்டன.குருவப்பநாயக்கனுார் காளியம்மாள் விவசாய நிலத்தில், மலைவேம்பு, தான்றிக்காய், குமிழ், பலா என, 8 வகையான அரிய வகை மரக்கன்றுகள், 288 நடப்பட்டது.பண்ணைக்கிணறு, ஜோதிலட்சுமி - சம்பத்குமார் நிலத்தில், தேக்கு, பலா, இலுப்பை, சொர்க்கம், புன்னை என, 301 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE