அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டங்கள் தொடரும்கட்சியினருக்கு ஸ்டாலின் கடிதம்

Added : டிச 26, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:'தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டங்கள், திட்டமிட்டபடி, ஜன., 10 வரை தொடரும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சி தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தி.மு.க., 16 ஆயிரத்து, 500 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடத்துகிறது. மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இரண்டு நாட்களில், 1,600க்கும் அதிகமான, கிராம சபை கூட்டம் நடந்துள்ளன.இந்த கூட்டங்கள் நீடித்தால், மக்கள்
 கிராம சபை கூட்டங்கள் தொடரும்கட்சியினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:'தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டங்கள், திட்டமிட்டபடி, ஜன., 10 வரை தொடரும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சி தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தி.மு.க., 16 ஆயிரத்து, 500 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடத்துகிறது. மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இரண்டு நாட்களில், 1,600க்கும் அதிகமான, கிராம சபை கூட்டம் நடந்துள்ளன.இந்த கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக, தி.மு.க., கூட்டணியை நோக்கி சென்று விடலாம் என்ற அச்சம், ஆட்சியாளர்களை ஆட்டி படைக்கிறது.
தேர்தலில், 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும், அனைத்து அமைச்சர்களும் வெற்றி பெறக்கூடாது என்பது இரண்டாவது இலக்கு.பத்து ஆண்டுகளாக நடக்கும், அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு பயன் தரும் சாதனைகள் என்ன என்பதை எடுத்துக்கூற, எதுவும் இல்லை. எனவே, தி.மு.க., நடத்தும் மக்களுடனான மகத்தான சந்திப்பை, அரசு அதிகாரத்தை வைத்து முடக்கும் முனை முறிந்த முயற்சியை, முதல்வர் மேற்கொண்டுள்ளார்

எனவே, கிராமசபை என்ற பெயரை பயன்படுத்தி, அரசியல் கட்சிகளும், தனியாரும் கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர்கள் அனுமதிக்கக் கூடாது என, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இத்தகைய அடக்கு முறைகளை, எத்தனையோ காலமாக, தி.மு.க., சந்தித்துள்ளது. அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி, தி.மு.க.,வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது.

தி.மு.க., கூட்டங்களுக்கு தடைபோட நினைத்தால், அதற்கான பதிலடியை, ஜனநாயக முறையில், நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதிகார மிரட்டல்களுக்கு அணு அளவும் அஞ்சாமல், தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜன.,10 வரை தொடரும்; இது உறுதி.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-202016:06:25 IST Report Abuse
oce திமுக கிராம பஞ்சாயத்து கூட்டங்களில் கிராமத்தினரை உட்கார வைப்பதில்லை. திமுகவால் கூலிக்கு அழைத்து வரப்படும் ரெடிமேடு ஆட்கள்.எல்லா கிராம கூட்டங்களிலும் கூடி இருப்பார்ககள்.போட்டோவை பார்த்தால் கிராமத்து வாசிகள் இப்படி முழு மேக்கப்பிலா இருப்பார்கள். இந்த ரெடி மேடு கூட்டத்தினருடன கிராமத்ததினரில் பசை உள்ள ஆட்கள் மட்டும் கலந்திருப்பார்கள். கூட்ட போட்டோக்களை பார்த்தால் உண்மையான. கிராமவாசி எவனும் அங்கில்லை என்பது தெரிய வரும்.எல்லாம் லாரிகளில் அழைத்து வரப்படும் ஆட்கள். வாக்கு சேகரிப்பில் உள்ள தந்திரம்.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
26-டிச-202014:51:43 IST Report Abuse
Dr. Suriya நல்ல கவனியுங்க....யாராவது வேட்டிக்குள்ள ஷு போடுவார்களா..போட்டுட்டாரே நம்ப சுடலை ..
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
26-டிச-202011:45:08 IST Report Abuse
ram சரி, சரி கலந்துகொண்டால் பணம் வரும், பீகார்காரன் ஐடியா, ஜெயித்தபிறகு வட்டியோடு சேர்த்து வாங்கிவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X