பொது செய்தி

தமிழ்நாடு

மின்மயமாக்கல்: கோட்ட மேலாளர் ஆய்வு

Added : டிச 26, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு; பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தை மின்மயமாக்கும் திட்டப்பணி, ஒரு ஆண்டாக நடக்கிறது. இதில், பாலக்காடு - பொள்ளாச்சி வழித்தடம் மற்றும் பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில், கிணத்துக்கடவு வரை பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் நிர்வாகத்தில் உள்ளது. இப்பகுதியில், மின்மயமாக்கல் திட்டப் பணியின் நிலையை, பாலக்காடு ரயில்வே
 மின்மயமாக்கல்: கோட்ட மேலாளர் ஆய்வு

பொள்ளாச்சி:திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு; பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தை மின்மயமாக்கும் திட்டப்பணி, ஒரு ஆண்டாக நடக்கிறது. இதில், பாலக்காடு - பொள்ளாச்சி வழித்தடம் மற்றும் பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில், கிணத்துக்கடவு வரை பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் நிர்வாகத்தில் உள்ளது. இப்பகுதியில், மின்மயமாக்கல் திட்டப் பணியின் நிலையை, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் திரிலோக் கோத்தாரி நேற்று ஆய்வு செய்தார். சிறப்பு ரயிலில் பயணித்து ஆய்வு செய்த போது, பாலக்காடு கோட்ட பொறியாளர்கள், மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.ஆய்வின் போது, மின்மயமாக்கல் பணிகளின் நிலவரத்தை கேட்டறிந்த கோட்ட மேலாளர், பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி ஸ்டேஷன் வந்த போது, ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், கோட்ட மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், பொள்ளாச்சியில் ரயில்களுக்கு தண்ணீர் நிரப்பும் மற்றும் பெட்டிகளை பராமரிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.ரயில்களின் வருகை, புறப்பாடு, தாமதம் குறித்து அறிவிக்க டிஜிட்டல் திரை அமைக்க வேண்டும். மீட்டர் கேஜ் காலத்தில் இவ்வழித்தடத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், என, உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X