சென்னை:பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பரமசிவன் மறைவுக்கு, முதல்வர் பழனிசாமி., இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த, பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான, தொ.பரமசிவன், நேற்றுமுன்தினம் மறைந்த செய்தி அறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பரமசிவன், இளையான்குடியில் உள்ள ஜாகிர்உசேன் கல்லுாரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லுாரியில், பேராசிரியராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றியவர்.
பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத்தன்மை கொண்டவர். பல நுால்களை எழுதியவர். இவர் எழுதிய, 'அழகர் கோயில்', 'அறியப்படாத தமிழகம்' போன்ற நுால்கள் குறிப்பிடத்தக்கவை. அழகர் கோயில் நுால், கோவில் ஆய்வுகளுக்கு, முன்னோடி நுாலாக திகழ்ந்து வருகிறது.
கடந்த, 2001ல் உலகத் தமிழ் பண்பாட்டு மையம், பரமசிவத்திற்கு, 'உலகத் தமிழ் பண்பாளர் விருது' வழங்கி கவுரவித்தது.தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட பரமசிவம் மறைவு, அவரது குடும்பத்திற்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE