பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா, புது பஸ் ஸ்டாண்ட் முன், வாஜ்பாய் உருவப்படம் அமைக்கப்பட்டு, மலர் துாவியும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகர தலைவர் மணிகண்டகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் நஞ்சப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். கட்சியின் நகர அலுவலகத்தில் பிரதமர் மோடியின் வேளாண் சட்டம் குறித்த விளக்க உரை ஒளிப்பரப்பட்டது.எம்.பி.,யால் பரபரப்புகிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், வடசித்துார் மேட்டுக்கடையில், ஒன்றிய பா.ஜ., தலைவர் தங்கராஜ் முன்னிலையில் நடந்த விழாவில், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது, தி.மு.க.,வின் மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க அப்பகுதிக்கு வந்த, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் மற்றும் தி.மு.க.,வினர், வாஜ்பாய் உருவப்படத்தை வணங்கி மரியாதை செலுத்தினர். பா.ஜ., நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.பி., பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE