பொது செய்தி

தமிழ்நாடு

பருத்திக்கு நிலையான விலை எதிர்பார்ப்பு

Added : டிச 26, 2020
Share
Advertisement
உடுமலை;நடப்பு சீசனில், பருத்திக்கு நிலையான விலை கிடைக்க, வேளாண்துறை வாயிலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு முன்பு, பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. மிக நீண்ட இழை மற்றும் மத்திய ரக இழை பருத்தி ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு, நுாற்பாலைகள் தேவைக்கு விற்பனைக்கு

உடுமலை;நடப்பு சீசனில், பருத்திக்கு நிலையான விலை கிடைக்க, வேளாண்துறை வாயிலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு முன்பு, பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. மிக நீண்ட இழை மற்றும் மத்திய ரக இழை பருத்தி ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு, நுாற்பாலைகள் தேவைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.பருத்தி சாகுபடியில், புதுவிதமான நோய்த்தாக்குதல், மண்டல பாசன நாட்கள் குறைக்கப்பட்டது மற்றும் அறுவடை சீசனில் விலை கிடைக்காதது ஆகிய காரணங்களால், சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது.கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க, மத்திய அரசு சில மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு சீசனில் விருகல்பட்டி, அடிவள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில், மானாவாரியாகவும், பி.ஏ.பி., பாசனத்துக்கும் மிக நீண்ட இழை பருத்தி ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தொடர் மழையால், மகசூலில், சில பாதிப்பு இருந்தாலும் நிலையான விலை கிடைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.விவசாயிகள் கூறியதாவது: பருத்தி சாகுபடியில், தொடர் மழை காரணமாக, மகசூல், குறைந்துள்ளது. எனவே, நடப்பு சீசனில், நிலையான விலை கிடைக்க அரசு வேளாண்துறை வாயிலாக உதவ வேண்டும். மத்திய பருத்தி கழகம், பருத்தி ரகங்களுக்கு, நிர்ணயிக்கும் ஆதார விலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினால், விலை நிர்ணயிக்க உதவியாக இருக்கும். வேளாண்துறையினர், ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், பருத்தி விலை நிலவரம் குறித்த தகவல்களை பகிர்ந்தால், நடப்பு சீசனில், பயனுள்ளதாக இருக்கும். அடுத்த சீசனிலும், சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X