ஊட்டி;நீலகிரியில், வைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்., பராமரிப்பிலாமல் உள்ளதால், குடிநீரை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரியின், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, 'பொதுமக்கள் மற்றும்சுற்றுலா பயணிகள் குடிநீர் பெற ஏதுவாக,மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், சுற்றுலா ஸ்தலங்கள், பொது இடங்கள்,' என, 68 இடங்களில், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரங்கள் (வாட்டர் ஏ.டி.எம்.,) அமைக்கப்பட் டுள்ளன. இந்நிலையில், கொரோனாவால், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.இங்குள்ள வாட்டர் ஏ.டி.எம்., பராமரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம்.,யை சுற்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதில் உள்ள தண்ணீரும் மாசடைந்து வருவதால், உள்ளூர் மக்கள்; பயணிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது, கொரோனா தளர்வுஅறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பராமரிப்பில்லாத வாட்டர் ஏ.டி.எம்., யை, 20 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என, சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பலரும் குடிநீர் பிடித்து செல்ல வந்து, இதன் நிலைபார்த்து, திரும்பி செல்கின்றனர்.எனவே, மாவட்டத்தில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களால், சுற்றுலா பயணிகளுக்கு நோய் பரவும் முன்பு, அதனைத்தையும் நாள்தோறும் பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE