பொது செய்தி

தமிழ்நாடு

இருந்தாலும்... கற்றுத் தருகிறார் பாடம்!

Added : டிச 26, 2020
Share
Advertisement
வயதானவர்கள், இன்னமும் சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்தால், வியப்பு மேலிடுகிறது நமக்கு. எப்படி இவர்களால் முடிகிறது. பழைய காலத்து சாப்பாடுப்பா... என்று பொத்தாம் பொதுவாக, நமக்கு நாமே பதில் சொல்லிக் கொண்டாலும், அவர்களின் உழைப்பு அப்படி. அதிகாலையில் எழுவார்கள். தங்களுக்கு விருப்பமான தொழிலில் ஈடுபடுவார்கள். பசி வயிற்றை கிள்ளாமல், இரைப்பைக்கு செல்லாது உணவு. தனியாக
 இருந்தாலும்... கற்றுத் தருகிறார் பாடம்!

வயதானவர்கள், இன்னமும் சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்தால், வியப்பு மேலிடுகிறது நமக்கு. எப்படி இவர்களால் முடிகிறது. பழைய காலத்து சாப்பாடுப்பா... என்று பொத்தாம் பொதுவாக, நமக்கு நாமே பதில் சொல்லிக் கொண்டாலும், அவர்களின் உழைப்பு அப்படி. அதிகாலையில் எழுவார்கள். தங்களுக்கு விருப்பமான தொழிலில் ஈடுபடுவார்கள். பசி வயிற்றை கிள்ளாமல், இரைப்பைக்கு செல்லாது உணவு. தனியாக உடற்பயிற்சி இல்லை. அவர்கள் செய்யும் தொழில் தான், மிகப்பெரிய உடற்பயிற்சி.துாக்கம் வராத பிரச்னை இல்லை. நிம்மதி கலந்த ஒரு வாழ்க்கை. ஆனால், இப்போது, அப்படியே நிலைமை தலைகீழ். உட்கார்ந்த இடத்தில் எழாமல் வேலை. பசி எடுப்பது என்னவோ குறைவு தான். துாக்கம் வராத பிரச்னை. இளமையிலேயை எட்டிப் பார்க்கிறது முதுமை. இதெல்லாம் வந்த பின் தான், ஆரோக்கியத்தின் மீது செல்கிறது கவனம். ஒரு கட்டத்தில் சோர்வு தட்டி விடுகிறது.ஆனால், 95 வயதிலும் சோர்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார் ஒருவர். பார்வை இன்னும் தெளிவாக... என்பது தான் முக்கியம்.சிறுமுகைபுதுார் கென்னடி வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். வயது 95. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். குடும்ப சூழ்நிலை... அதற்கு மேல் படிக்க செல்லவில்லை. அதனால், 11வது வயதில் நெசவுத் தொழிலை கற்பதில் ஆர்வம் காட்டினார். இவரது தந்தை வெங்கட், விவசாயத்தில் ஈடுபட்டாலும், ஈஸ்வரனின் கவனம், நெசவுத் தொழில் மீதே இருந்தது. நன்கு தறி நெய்து பழகிய பின், வாரம், 8 கெஜம், 3 சேலைகளை நெசவு செய்து, கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கி வந்தார். அப்போது, ஒரு சேலைக்கு, இரண்டு ரூபாய் கூலி பெற்றுள்ளார்.ஆர்வம் அதிகரிக்க, தனது முழு கவனத்தையும் செலுத்தி, காட்டன் சேலைகள் உற்பத்தியில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர், 60 வயதில் ஓய்வு பெற்றார். ஆனால், அதன் பின்பும், தொழில் மீது கொண்ட பற்றால், அதற்கு மேல் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க விரும்பவில்லை. அதனால் வீட்டிலேயே ஒரு கைத்தறியை அமைத்து, தனியாரிடம் நுால் பெற்று, சேலைகள் நெசவு செய்து வந்தார்.தனது, 85வது வயதில், நெசவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின், நுால்களை கோனில் சுற்றும் பணியில் ஈடுட துவங்கினார். இவர் மகனும், இதே தொழிலில் உள்ள நிலையில், மகனுக்கு, தேவையான நுால்களை சுற்றி கொடுப்பதோடு, வெளியாட்களுக்கும், நுால்களை சுற்றி தருகிறார். இதனால், நாள் ஒன்றுக்கு, 60 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.நெசவு தொழிலாளி ஈஸ்வரன் கூறுகையில், 'நன்கு நெசவு தொழிலை கற்றுக்கொண்ட பின், வாரம் ஆறு ரூபாய் கூலி பெற்று வந்தேன். 60 வயது முடிந்து ஓய்வு பெறும் போது, ஒரு சேலைக்கு கூலி, 50 ரூபாய் வீதம், வாரம் 150 ரூபாய் பெற்றேன். நெசவுத் தொழிலில் ஈடுபட்ட, 45 ஆண்டுகளில் தோராயமாக, 9,500 சேலைகள் செய்திருப்பேன்.இந்த வயதிலும், என்னால் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பாததால், நெசவு சார்ந்த ஏதாவது ஒரு வேலை செய்து வருகிறேன். அதனால் காலை, 8:00 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரையும், மீண்டும் மாலை, 4:00 மணியில் இருந்து, 6:00 மணி வரையும், நுால் சுற்றும் பணிகளிலும் ஈடுபடுகிறேன். கண்பார்வை நன்றாக இருப்பதால், என்னால் நுால் சுற்ற முடிகிறது. எனது ஆயுள் உள்ளவரை, இந்த நெசவுத்தொழில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X