மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா, பா.ஜ., சார்பில், அன்னுார் கைகாட்டியில், வடக்கு ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது.பா.ஜ., அமைப்பு சாரா அணியின் மாநில துணை தலைவர் தண்டபாணி பேசினார். அணியின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கைவினைஞர்கள் சங்க மாநில அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட முன்னாள் செயலாளர் தர்மலிங்கம், மகளிரணி ஒன்றிய தலைவர் பாக்கியவதி உட்பட பலர் பங்கேற்றனர்.வடக்கு ஒன்றியத்தில், அ.மேட்டுப்பாளையம், மூக்கனுார் உட்பட, 10 இடங்களில் கொடியேற்றப்பட்டது. தெற்கு ஒன்றியத்தில், கரியாம்பாளையத்தில், ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால், விவசாய அணி ஒன்றிய தலைவர் புஷ்பராஜ், இளைஞரணி ஒன்றிய தலைவர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர். கணேசபுரம், கெம்பநாயக்கன்பாளையம், பொன்னேகவுண்டன்புதுார் உள்ளிட்ட இடங்களில் விழா கொண்டாடப்பட்டது.கோவில்பாளையத்தில், பா.ஜ., ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் பேசினார். மாவட்ட துணை தலைவர் வெள்ளிங்கிரி, பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் செந்துார் முருகேசன், ஒன்றிய பொது செயலாளர் பானு விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.கள்ளிப்பாளையம் சக்தி கேந்திராவில் நடந்த விழாவில், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் விசாலாட்சி, ஒன்றிய இளைஞரணி தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், அண்ணா நகர், கிருஷ்ணா நகர் உள்பட ஏழு ஊராட்சிகளிலும், இரு பேரூராட்சிகளிலும் விழா கொண்டாடப்பட்டது.* பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில், வாஜ்பாய் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பா.ஜ., வடக்கு மாவட்ட செயலாளர் விவேகானந்தன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் யோகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஜோதிபுரம் வண்ணாங்கோவில் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கொடியேற்று விழா, தொழிலாளர்களுக்கு, ஆயுள் காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர் -நிருபர் குழு-.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE