சூலுார்:சூலுார் நகர பா.ஜ., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா, புதியவர்கள் கட்சியில் இணையும் விழா, கொடியேற்று விழா என, முப்பெரும் விழா நடந்தது. நகர தலைவர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.கட்சியில் இணைந்த புதிய தொண்டர்களுக்கு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., கொடியேற்றப்பட்டு, வாஜ்பாய் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி பேசுகையில், ''பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, நமது நாட்டை உலக அரங்கில் தலைநிமிர செய்தவர் வாஜ்பாய். தங்க நாற்கர சாலைகளை அமைத்து தந்தார். தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்,'' என்றார்.முன்னதாக, ரங்கநாதபுரம் பகுதியில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், சத்தியமூர்த்தி, செந்தில்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் சக்திவேல், மகளிரணி நிர்வாகி சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE