இந்திய நிகழ்வுகள்
பாதுகாவலரை கொன்ற யானை
பெங்களூரு: கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் நாஹர்ஹோலே புலிகள் சரணாலயத்தில், நேற்று முன்தினம் வன பாதுகாவலர் குருராஜா, 52, உட்பட மூவர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த காட்டு யானை, குருராஜாவை மிதித்து கொன்றது. மற்ற இருவரும் அங்கிருந்து தப்பினர்.
ரயிலில் பெண் பலாத்காரம்
மும்பை: மஹாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில், சமீபத்தில் ரயிலில் சென்ற, 20 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர், ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார். காயங்களுடன் மயங்கி கிடந்த அவரை, போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.அமைச்சரின் தாய் காலமானார்பாட்னா: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத்தின் தாய் பிமலா, 90, பீஹார் மாநிலம் பாட்னாவில் வசித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு காலமானார்.

தமிழக நிகழ்வுகள்
பெண்ணிடம் செயின் பறிப்பு
கோவை:கோவை கணபதி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி தீபா, 40. கடந்த, 22ம் தேதி தன் வீட்டின் அருகே இருந்த மளிகைக்கடையில், பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர், முகவரி கேட்பது போல், அவர் கழுத்தில் அணிந்திருந்த, நான்கு பவுன் தங்க செயினை பறித்து தப்பினர்.தீபா அளித்த புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
டூவிலர் மீது பஸ் மோதி குழந்தைகளுடன் தொழிலாளி பலி
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் மகன் கமலேஷ் 9, மகள் குஷிகா 7, ஆகியோருடன் தந்தை கணபதி பலியானார்.
வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட மூவர் கைது
; கள்ளக்குறிச்சியில் வரதட்சணைக்கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்படமூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு வலை
திருப்பூர்:அவிநாசி அருகே, 7 வயது சிறுமியை தாக்கி, குப்பையில் வீசிச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடியில் கடத்தல் அரிசி பறிமுதல்
பரமக்குடி : பரமக்குடியில் இருந்து மதுரைக்கு,பால்வண்டி மற்றும் கூரியர் வாகனங்களில் கடத்திச் செல்லஇருந்த 3,600 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புபோலீசார் பார்த்திபனுார் செக் போஸ்ட்டில கைப்பற்றினர்.

உலக நிகழ்வுகள்
இந்திய வம்சாவளி நபர் கைது
டொரோன்டோ: வட அமெரிக்க நாடான கனடாவில், தொலைபேசி வாயிலாக, 3.60 லட்சம் பணமோசடி செய்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபினவ் பெக்டர், 25, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில், மேலும் ஒன்பது பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோசடிகளை கண்டறிய, கனடா போலீசார், 2018ல் சிறப்பு குழுக்களை அமைத்தனர்.
தாவூத் அண்ணன் மகன் பலி
கராச்சி: மும்பையில், 1993ல் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் தாவூத் இப்ராஹிம். சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவரின் அண்ணன் சபீர் காஸ்கரும், நிழல் உலக தாதாவாகவே பார்க்கப்பட்டார். 1981ல், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சபீர் காஸ்கரின் மகன் சிரஜ் காஸ்கர், 38, பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வந்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிரஜ் காஸ்கர், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE