பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அரசு கெஞ்சக் கூடாது!

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில், ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சலும், சாதுார்யமும் ஆண்களுக்கு இல்லை என்பது, பல சந்தர்ப்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.ரயில்வே ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி
ithu ungal idam, இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில், ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சலும், சாதுார்யமும் ஆண்களுக்கு இல்லை என்பது, பல சந்தர்ப்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி காட்டினார், முன்னாள் பிரதமர் இந்திரா.'போராட்டம், வேலை நிறுத்தம்' என மிரட்டிய போது, தமிழக அரசு ஊழியர்கள், ஒரு லட்சம் பேரை, 'டிஸ்மிஸ்' செய்து பாடம் புகட்டினார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த கோல்டா மேயர், அரபு நாடுகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தார். பிரிட்டன் பிரதமர் மார்க்கரெட் தாட்சரை, 'இரும்பு பெண்மணி' என்றழைத்தனர்.

பாகிஸ்தானோடு போரிட்டு, வங்காள தேசத்திற்கு விடுதலை வாங்கித் தந்தார், இந்திரா. பஞ்சாப்பில், தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கினார்.கம்யூனிஸ்ட்கள், இங்கு தான் அற்ப விஷயத்துக்கு எல்லாம் போராட்டம் நடத்துகின்றனர். ரஷ்யா, சீனா போன்ற கம்யூ., நாடுகளில் எல்லாம், போராட்டம் நடத்தினால், உடனடியாக ஒடுக்கப்படும்.இன்று டில்லியில், 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடிக்கிறது. விவசாயிகளை கொத்தடிமைகளாக நடத்தி, கமிஷன் என்ற பெயரில் சுரண்டும் புரோக்கர்கள் தான், வருமானம் போய்விடுமே என்ற பயத்தில், போராட்டம் நடத்துகின்றனர்.


latest tamil news


இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், மத்திய அரசு அதிகாரிகளுடன், முறையாக பேச்சு நடத்துவதில்லை. சுயநலவாதிகள் நடத்தும் அந்த போராட்டத்தை ஒடுக்க முடியாமல், மத்திய அரசு தவிப்பது, வேதனை தருகிறது.'போராட்டம், வேலை நிறுத்தம் செய்வதை, அடிப்படை உரிமையாக எடுத்துக் கொள்ள முடியாது' எனக் கூறிய நீதிமன்றம், விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க தயங்குவது ஏன் என, தெரியவில்லை.

ஜனநாயக நாட்டில் பிரதமர், முதல்வர் எல்லாம், சில நேரங்களில் சர்வாதிகாரியாக மாறத் தான் வேண்டியதிருக்கும்.'மயிலே மயிலே இறகு போடு..' என்ற கெஞ்சல், அனைத்திற்கும் உதவாது என்பதை, மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-டிச-202022:00:31 IST Report Abuse
செல்லத்துரை வைகை செல்வன், அந்த போராட்டங்கள் அரசிடம் வேலை பார்த்தவர்கள் செய்தது, இது நாட்டின் முதுகு எலும்பாக திகழும் விவசாயிகள் நடத்துவது,,,
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
26-டிச-202020:52:13 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் மண்டி வைத்திருப்பவர்கள் கொள்ளை அடிப்பார்கள் , அப்போ அம்பானியும் அதானி சமுக சேவை செய்வார்கள::: இதை சிங்கிகள் கண்டுபிடித்து உள்ளனர்
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
26-டிச-202019:59:51 IST Report Abuse
Siva எனக்கு இவர்கள் போராளிகளாக தெரிய வில்லை. அறுவடை முடிந்த பிறகு குளிர்கால டூரிஸ்ட் ஆக உள்ளனர்...பூரோக்கர்கள் வாழ விவசாயிகள் பெயரில் போராட்டம்.... நிஜம் இதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X