பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் ரத்து

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: பயணியர் வருகை குறைவால், சென்னை - மதுரை தேஜஸ் ரயில், வரும், 4ம் தேதியில் இருந்து, ரத்து செய்யப்படுகிறது.சென்னை - மதுரை இடையே, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பின், அக்., 2ல் இருந்து, மீண்டும் இயக்கப்பட்டது.இந்த ரயில், எழும்பூரில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்படுவதால், பயணியர் அதிகம் வர முடியவில்லை.
chennai, madurai, tejas, train, cancel, சென்னை, மதுரை, தேஜஸ், ரயில், ரத்து

சென்னை: பயணியர் வருகை குறைவால், சென்னை - மதுரை தேஜஸ் ரயில், வரும், 4ம் தேதியில் இருந்து, ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - மதுரை இடையே, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பின், அக்., 2ல் இருந்து, மீண்டும் இயக்கப்பட்டது.இந்த ரயில், எழும்பூரில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்படுவதால், பயணியர் அதிகம் வர முடியவில்லை. நேரம் மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.


latest tamil news


இதனால், அக்., 12ல் இருந்து, நேரம் மாற்றப்பட்டு, எழும்பூரில் இருந்து காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல், 12:50 மணிக்கு சென்றடைந்தது. மதுரையில் இருந்து, மாலை, 3:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. இந்நிலையிலும், இந்த ரயிலில் பயணியர் வருகை குறைந்ததால், இருவழியிலும், ஜன., 4 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - London,யுனைடெட் கிங்டம்
26-டிச-202017:53:18 IST Report Abuse
Guna May be It could be to free up slot for private train.
Rate this:
Cancel
26-டிச-202015:16:14 IST Report Abuse
ஆரூர் ரங் முன்பு இந்த தேஜஸ் இல் முழுமையான பயணிகளுடன் பயணித்திருக்கிறேன் . இப்போது கோவிட் 19க்கு பயந்து பலர் பயணத்தைத் தவிர்ப்பதால் கூட்டம் வருவதில்லை😇. கோவிட் ஒழிந்தால்தான் அனைத்து ரயில்களிலும் கூட்டம் வரும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
26-டிச-202013:48:40 IST Report Abuse
தமிழ்வேள் இந்த வண்டியை சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்குதல் நல்லது. காலை ஆறரை மணிக்கு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் ஏதும் கிடையாது. எட்டு அல்லது ஒன்பது இரண்டாம் வகுப்பு சீட் கார்கள் இணைக்கப்பட்டால் நல்லது . வண்டி வெற்றி அடையும் .ஷ்தாப்தி எக்ஸ்பிரஸ் கூட சென்னை பெங்களூரு க்மமர்சியால் /கார்ப்பரேட் தடங்களில்தான் வெற்றி அடைகிறதே தவிர கோவைக்கு கூட ஒத்துவரவில்லை .அப்படியிருக்க தென்மாவட்டங்கள் போன்ற ரெசிடென்ஷியல் டவுன்களுக்கு ஆடம்பர வண்டிகள் இயக்கப்படுவது வருமானம் தராது .கோவை - மாயூரம் ஜன ஷதாபத்தி போலவாவது மாற்றி இயக்குவது நலம் .முழுவதும் ஏசி செய்யப்பட ஹம்சபர் எக்சிபிரசுக்கும் இதே கதைதான் .கூட்டம் கிடையாது.. காலி வண்டிகள் சென்னைக்கு தெற்கே இயக்கப்படுகின்றன. பெருமைக்கு எருமை மேய்ப்பது அவசியமா என்பதை தெற்கு ரயில்வே யோசிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X