பொது செய்தி

தமிழ்நாடு

11 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 11 மாவட்டங்களில், கொரோனா தொற்று பாதிப்பு, ஒற்றை இலக்குகளில் உள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 65 ஆயிரத்து, 510 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.அதில், சென்னையில், 292; கோவையில், 95 உட்பட, 1,027 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பு, 35 மாவட்டங்களில் குறைவான

சென்னை: தமிழகத்தில், 11 மாவட்டங்களில், கொரோனா தொற்று பாதிப்பு, ஒற்றை இலக்குகளில் உள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 65 ஆயிரத்து, 510 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.



latest tamil news



அதில், சென்னையில், 292; கோவையில், 95 உட்பட, 1,027 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பு, 35 மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது; அதில், 11 மாவட்டங்களில், ஒற்றை இலக்குகளில் பாதிப்பு பதிவாகி உள்ளது. மார்ச் முதல் நேற்று வரை, 1.37 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எட்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 142 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சை பெறுபவர்களில், சென்னையில், 332 பேர் உட்பட, 1,103 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 90 ஆயிரத்து, 965 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.


latest tamil news


தற்போது, சென்னையில், 2,932; கோவையில், 914 பேர் உட்பட, 9,129 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, 12 பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 48 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay Vathsan - KUMBAKONAM,ஐக்கிய அரபு நாடுகள்
26-டிச-202014:15:00 IST Report Abuse
Vijay Vathsan மிக்க சந்தோஷம் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக என் தாய் நாடு அறியப்பட வேண்டும் எல்லாரும் வெகு விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X