திருப்பரங்குன்றம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று மாலை 6:00 மணிக்கு கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள பெரிய கதவு திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார்.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமா தேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலை புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் நடந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலித்தார். இரவு கருட வாகனத்தில் பெருமாள் உலா நிகழ்ச்சி நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE