மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி,பெரியகுளம்(தனி), போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.
இதற்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவில் இருந்து 4 கன்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டன. இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு வருகிறது.புகார்இதற்கிடையே பெரியகுளம், போடி தொகுதியில் 11,000க்கும் அதிகமான இறந்துபோனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியில் உள்ளதாக தி.மு.க.,வும், தேவாரம் அருகே பல்லவராயன்பட்டியில் 200 பேர் தமிழகம், கேரளாவில் ஓட்டுரிமை கொண்ட இரட்டை வாக்காளர்களாக இருப்பதாகவும் , அவற்றை ஓரிடத்தில் நீக்க வலியுறுத்தியும் மனு அளித்துள்ளனர்.
நடவடிக்கை : மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ''வாக்காளர் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தகுதியானவற்றை ஆய்வு செய்து பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கிறது. இறந்த வாக்காளர்கள், இரட்டை பதிவு வாக்காளர் தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். இறந்தவர்களின் பட்டியலை சரி பார்த்து உறுதி செய்து நீக்கப்படுவர். இரட்டை வாக்காளர்களை இரண்டு வித முறைகளில் பட்டியல் சரிபார்க்கப்படும்.
ஒரே பெயருடைய நபர், தாய், தந்தை பெயர், முகவரி போன்ற விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து உண்மையில் அவருக்கு இரு பதிவு இருந்தால் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர் சிஜிதாமஸ் விரைவில் வர உள்ளார். நுாறு சதவீதம் தவறு இல்லாத, பிழைகள் இல்லாத பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE