திருமங்கலம் : ''சிவரக்கோட்டை சிப்காட் திட்டத்தை தி.மு.க., அரசு கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயன்றது. தற்போது இந்த திட்டத்தை அரசு ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றப்பட்டுள்ளது,'' என, திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
தி.மு.க., ஆட்சியில் 2009ல் சிவரக்கோட்டையில் சிப்காட் திட்டம் அறிவிக்கப்பட்டு 1478 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை நிறுத்தி வைத்தார். தற்போது அமைச்சர் உதயகுமார் முயற்சியால் திட்டத்தை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை நகலை விவசாயிகளிடம் அமைச்சர் வழங்கினார்.
பின் அமைச்சர் பேசியதாவது: இங்கு வரகு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, மக்காச்சோளம், துவரை என 27 வகையான சிறுதானியங்கள் மூன்று போகம் விளையும். சிவரக்கோட்டை, கரிகலாம்பட்டி உள்ளிட்ட ௧௦ கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரம் விவசாயி களின் வாழ்வாதாரம் சிப்காட் அமைந்தால் பறிபோகும். அதை உணர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் திட்டம் கைவிடப்பட்டது.மக்களுக்கு எதுவும் செய்யாமல் கிராம சபை கூட்டங்களை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடத்துகிறார். போலியான கிராம சபை கூட்டம் கூட்ட தற்போது என்ன அவசியம். தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதகமான செயல்களை செய்தனர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE