திண்டுக்கல் வழியாக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி ரயில்கள் 10க்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன. இதில் பயணிக்க, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியாதவர்கள், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை கவுண்டரில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.டிக்கெட் முன்பதிவு செய்து, பிறகு அதை ரத்து செய்யும் போது, அதற்கான கட்டணத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கிறது.
இதற்காக பயணிகளின் வங்கி விவரங்களை ரயில்வே நிர்வாகம் அலைபேசி வாயிலாக ஒரு போதும் கேட்பதில்லை.இருப்பினும் சில நாட்களாக மோசடி கும்பலை சேர்ந்த சிலர் அலைபேசி வாயிலாக, ரத்து செய்த டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வங்கி விவரங்களை கேட்பதாக புகார்கள் வந்துள்ளன. பயணிகள் அலைபேசி வாயிலாக வங்கி விவரங்கள், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.
பயணம் ரத்தாகும் போது பயணிகளின் வங்கி கணக்கில் டிக்கெட் கட்டணம் தானாகவே வரவு வைக்கப்படும். ஸ்டேஷனில் முன்பதிவு செய்யும் டிக்கெட் கட்டணம், குறிப்பிட்ட காலத்திற்குள் கவுண்டரில் திரும்ப தரப்படும். யாராவது வங்கி விவரங்களை கேட்டால் இலவச எண் 138 ல் புகார் செய்யலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE