சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
மதுரை : ''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்,'' என, மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தெரிவித்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் செல்லுார் ராஜூ உள்ளிட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணப்பெருமாள், அருள்பிரசாத், ஆறுமுகம்,

மதுரை : ''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்,'' என, மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தெரிவித்தார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் செல்லுார் ராஜூ உள்ளிட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணப்பெருமாள், அருள்பிரசாத், ஆறுமுகம், மணிகண்டன், மாரியப்பன், கல்யாணசுந்தரம், யத்தீஸ்வரன், ஆசிரியர் சரவணன் சந்தித்து மனு அளித்தனர்.பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தால் ஆறு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு நன்றி பாராட்டுவர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி டிச., 28 முதல் 30 வரை கோரிக்கை அட்டை அணிவது, 2021 ஜன., 6ல் கலெக்டர்களிடம் முறையிடுவது, ஜன., 28 ல் மாநிலத்தில் 20 இடங்களில் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும். அரசு ஊழியர், ஆசிரியர் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமி நல்ல முடிவு எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X