மதுரை : ''புத்தாண்டு பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்து பெறலாம்,'' என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 ன் கீழ் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி அரசு பொது இ சேவை மையம் மூலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். கடை வரைபடம் (ஆறு நகல்), கிரைய ஆவணம் (அசல் மற்றும் 5 ஒளிநகல்), உரிமம் கட்டணம் ரூ.500 செலுத்தியதற்கான ரசீது(அசல்), முகவரி சான்று(பான் கார்டு, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு), உள்ளாட்சி ரசீது, இரு பாஸ்போர்ட் போட்டோக்களுடன் மனு செய்ய வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE