பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் சார்பில் அப்பார்ட்மென்ட்களில் கோலப்போட்டி

Added : டிச 26, 2020
Share
Advertisement
மதுரை : தினமலர் மற்றும் ஸ்ரீ ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் மதுரையில் அப்பார்ட்மென்ட்களில் கோலப்போட்டி டிச. 27, ஜன.1, 2, 3, 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடக்க உள்ளது. காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை ஏதேனும் இரண்டு மணி நேரத்தில் விருப்பம் தெரிவிக்கும் அப்பார்ட்மென்ட்களில் போட்டி நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அப்பார்ட்மென்ட்டில்

மதுரை : தினமலர் மற்றும் ஸ்ரீ ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் மதுரையில் அப்பார்ட்மென்ட்களில் கோலப்போட்டி டிச. 27, ஜன.1, 2, 3, 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடக்க உள்ளது.

காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை ஏதேனும் இரண்டு மணி நேரத்தில் விருப்பம் தெரிவிக்கும் அப்பார்ட்மென்ட்களில் போட்டி நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அப்பார்ட்மென்ட்டில் குடியிருப்பவர்கள் தங்களுக்கு விரும்பும் தேதி, நேரத்தை தேர்வு செய்யலாம். குடியிருப்போர் நலச்சங்க லெட்டர் பேடில் போட்டியில் பங்கேற்போர் பெயர், பிளாட் எண், பங்கேற்க விரும்பும் தேதி, நேரம், அலைபேசி எண்ணுடன் 98940 09411ல் வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும். கோலமிடுபவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்.

தினமலர் நடுவர் குழு அப்பார்ட்மென்டிற்கு வந்து கோலங்களை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களுக்கு அங்கேயே பரிசுகள் வழங்கப்படும். மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மெகா பரிசுகள் வழங்கப்படும். நியூ திருப்பதி மசாலா அன்ட் அப்பளம், மதுரை பாண்டியன் அப்பளம், மில்க்கா வொண்டர்கேக் மற்றும் அல்ட்ரா டிஸ்கவுண்ட் இணைந்து வழங்குகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X