திருமங்கலம் : திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா தலைமையில் நடந்தது.துணை தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர் மின்னல்கொடி,''எங்கள் ஒன்றிய பகுதியில் கழிவு நீர் செல்ல வழியில்லை. தண்ணீர் பிரச்னை உள்ளது,'' என்றார்.
''இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார் தெரிவித்தார்.கவுன்சிலர் சிவபாண்டி,''தீர்மான நகலில் வழக்கு தொடர்பான செலவு என மட்டும் உள்ளது. என்ன வழக்கு என குறிப்பிட வேண்டும்,'' என்றார். கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன் கோரிக்கையை ஏற்று பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவுநாளையொட்டி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE