ஒட்டன்சத்திரம் : பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்களை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி டிவி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதத்தில் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பாடத்திட்டங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கொரோனா விடுமுறை காரணமாக 35 சதவீத பாடத்திட்டங்களை குறைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை, பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எவை என்பதை இன்னும் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பொதுத் தேர்வுக்கான பாட விபரங்களை பள்ளிகள், இணையதளம் வழியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
.மார்ச், ஏப்ரலில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பரிலேயே பெயர் பட்டியல் தயார் செய்வது முதல் ஜனவரியில் நடைபெறும் பிராக்டிக்கல் தேர்வுக்கான ஏற்பாடுகள் வரை கல்வி மற்றும் தேர்வுத் துறைகள் தீவிரமாக செயல்படும். ஆனால் இந்தாண்டு அதுபோன்ற பணிகள் எதையும் இதுவரை துவங்கியதாக தெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE