புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், இந்திய ரயில்வேக்கு ரூ.2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள், விவசாய சங்கத்தினர் டில்லிக்குள் நுழையும் போராட்டத்தை கடந்த நவ., 26ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தால், ரயில்வேக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பியாஸ், அமிர்தசரஸ் நகரங்களுக்கான ரயில்வே போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மாற்றுவழியில் ரயில்கள் இயக்கப்பட்ட போதும், பல ரயில்களை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டது.
விவசாயிகளின் போராட்டத்தால் சரக்கு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்களும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. வடக்கு ரயில்வேக்கு ரூ.2,400 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE