ஏமாற்றம் தந்த சபரிமலை சீசன்....ஏக்கத்தில் கொடைரோடு வியாபாரிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றம் தந்த சபரிமலை சீசன்....ஏக்கத்தில் கொடைரோடு வியாபாரிகள்

Added : டிச 26, 2020
Share
கொடைரோடு : சபரிமலை பக்தர்கள் வருகை குறைவால் கொடைரோட்டில் பழ வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது. திண்டுக்கல் - -மதுரை இடையே பழ வியாபாரத்தால் முக்கியத்துவம் பெற்றது கொடைரோடு. அம்மையநாயக்கனுார், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியினரே பெரும்பாலும் ரயில் போக்குவரத்திற்காக கொடைரோடு வருகின்றனர். தைப்பூசம் துவங்கி, சபரிமலை, பங்குனி உத்திர சீசன் நேரங்களில், பழ வியாபாரம்

கொடைரோடு : சபரிமலை பக்தர்கள் வருகை குறைவால் கொடைரோட்டில் பழ வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது.
திண்டுக்கல் - -மதுரை இடையே பழ வியாபாரத்தால் முக்கியத்துவம் பெற்றது கொடைரோடு. அம்மையநாயக்கனுார், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியினரே பெரும்பாலும் ரயில் போக்குவரத்திற்காக கொடைரோடு வருகின்றனர். தைப்பூசம் துவங்கி, சபரிமலை, பங்குனி உத்திர சீசன் நேரங்களில், பழ வியாபாரம் களை கட்டும்.இதையடுத்து நான்கு வழிச்சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன. இருப்பினும் கடந்தாண்டுகளில் நடந்த வியாபாரத்தில் பாதிகூட நடக்கவில்லை. இதனால் பழ வியாபாரம் செய்யும் குடும்பங்கள் பாதித்துள்ளன.

வெளியூர் பயணிகளின் வருகை சில ஆண்டுகளாக குறைந்துள்ளது. இந்தாண்டு சபரிமலை சீசன் துவங்கியும், கொடை ரோடுக்கு ஐயப்ப பக்தர்கள் வரத்து குறைவாக உள்ளது. சீசன் வருவாயை எதிர்நோக்கி வியாபாரிகள் ஏக்கத்தில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X