பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...

Added : டிச 26, 2020
Share
Advertisement
தீயில் கருகிய வேன்மேலுார்: முத்துச்சாமிபட்டி விவசாயி முத்துக்குமரன்46, வீட்டு முன் நின்ற வேனை ஓட்ட துவங்கிய போது காஸ் கசிவால் தீப்பற்றியது. இதில் வேன் அருகிலிருந்த டூவீலர் எரிந்தன. சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணை தாக்கியதாக12 பேர் மீது வழக்குமேலுார்: அட்டப்பட்டி கலைசெல்விக்கும் 30,

தீயில் கருகிய வேன்மேலுார்: முத்துச்சாமிபட்டி விவசாயி முத்துக்குமரன்46, வீட்டு முன் நின்ற வேனை ஓட்ட துவங்கிய போது காஸ் கசிவால் தீப்பற்றியது. இதில் வேன் அருகிலிருந்த டூவீலர் எரிந்தன. சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணை தாக்கியதாக12 பேர் மீது வழக்குமேலுார்: அட்டப்பட்டி கலைசெல்விக்கும் 30, பக்கத்து வீட்டை சேர்ந்த குமாருக்கும் 40, வீடு கட்டுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் 12 பேர் சேர்ந்து தாக்கியதாக கீழவளவு போலீசில் கலைசெல்வி புகார் கொடுத்தார். அதன்படி குமார் மற்றும் உறவினர்கள் பாரதிராஜா, சுதா உள்ளிட்ட 12 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலிமேலுார்: அய்யாபட்டி கட்டட வேலை செய்பவர் ஆண்டி அம்பலம் 56. நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து டூவீலரில் ஊருக்கு திரும்பினார் (ெஹல்மெட் அணியவில்லை). தாமரைப்பட்டி விலக்கு அருகே எதிரில் டூவீலரில் வந்த நாட்டார்மங்கலம் ராஜா 26, மோதினார். ஆண்டிஅம்பலம் இறந்தார். ராஜா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர். மறியல்: 200 பேர் கைதுசெக்கானுாரணி: தேவர் சிலை முன் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் டி.என்.டி., சீர்மரபினர் பிரிவில் இடம் பெற்ற 68 ஜாதியினருக்கு மத்திய, மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்ககோரி மறியல் நடந்தது.

தலைவர்தவமணி, நிர்வாகிகள் ஆதிசேஷன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிப்புக்குஉள்ளானது. மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.ரேஷன் அரிசி கடத்தியவர் கைதுதிருமங்கலம்: சோழவந்தான் ரோட்டில் அரிசி கடத்தல் நடப்பதாக வந்த தகவலையடுத்து டி.எஸ்.பி., வினோதினி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வேனை சோதனையிட்ட போது 50 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதில் ஈடுபட்ட ஊராண்டஉரப்பனுார் காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடையவர்களையும் போலீசார் விசாரிக்கின்றனர்.தந்தையை குத்தியவர் கைதுமதுரை: நெல்பேட்டை முகமதுகாசிம் 49. இவரது 2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் யாசர் அரபாத் 19. முன்விரோதம் காரணமாக முகமதுகாசிமை கத்தியால் குத்தியதாக விளக்குத்துாண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பஸ்சில் நகை திருட்டுமதுரை: திருச்சி சமயபுரம் முருகானந்தம் 47. மதுரைக்கு மாமனார் வீட்டிற்கு வந்துவிட்டு மாட்டுத்தாவணியில் இருந்து அரசு பஸ்சில் புறப்பட்டார். மேலுார் அருகே பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்திருந்த பை திருடப்பட்டிருந்தது.அதில் இருபதரை பவுன் நகைகள் இருந்தன. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.தி.மு.க.,வினர் மீது வழக்குமதுரை: அரசின் கொரோனா ஊரடங்கு தடையை மீறி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க., சார்பில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடந்தது. இதுதொடர்பாக தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X