பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 26, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள், நாகல் நகர் வரதராஜ பெருமாள், எம்.வி.எம்.,நகர், வெங்கடாஜலபதி, ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள், செட்டிநாயக்கன் பட்டி ஸ்ரீநிவாச பெருமாள், தாடிக்கொம்பு
 திண்டுக்கல் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள், நாகல் நகர் வரதராஜ பெருமாள், எம்.வி.எம்.,நகர், வெங்கடாஜலபதி, ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள், செட்டிநாயக்கன் பட்டி ஸ்ரீநிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. சுவாமி- அம்பாள் ரதத்தில் கிளம்பி சொர்க்க வாசல் வழியே பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கொடைக்கானல்வரதராஜ பெருமாள், பண்ணைக்காடு ராமர் கோயில், மாய அழகர், கள்ளழகர், வெங்கடாஜலபதி, தாண்டிக்குடி சவுமியநாராயணப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது.சின்னாளபட்டிமேட்டுப்பட்டி வெங்கடேசப்பெருமாள் கோயிலில், மூலவருக்குவெள்ளிக்கவச அலங்காரம், மகா லட்சுமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு, லட்சுமி சமேத பூவராகப்பெருமாள் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனைக்குப்பின் 'கோவிந்தா' கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் துளசி, வெற்றிலை மாலை அபிேஷகத்துடன் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.

வடமதுரைசவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். பின் கருட வாகனத்தில் பெருமாள் சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு வெளி பிரகாரம் வழியே கோயில் மண்டபத்திற்கு திரும்பினர்.

எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்சனத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. எ.பண்ணைப்பட்டி பெருமாள் கோயில், மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.பூஜாரிகள் பேரவைகுளத்துார் ஏ.டி.,காலனி சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. நேற்று முன்தினம் பூஜாரிகள் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி பூஜை நடந்தது. சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாவட்ட இணை தலைவர் சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X