திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. நேற்று அடுத்த தவணை நிதியை பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். இதற்காக, வட்டார வேளாண் அலுவலகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.பிரதமர் ஒரு பட்டனை அழுத்தியதும் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கும் ரூ.18 ஆயிரம் கோடி நிதி அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்றடைந்தது. நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் பிரதமர் உரையாடினார்.
திண்டுக்கல் வேளாண் அலுவலகத்தில் உதவி இயக்குனர் நாகேந்திரன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர்கள் செல்விஹர்சனா, நாகராஜ், ஒருங்கிணைப்பாளர் கோபி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE