சிவகங்கை : சிவகங்கை நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை ரூ.பல லட்சம் வரை பெற்றுக்கொண்டு முறைகேடாக பிளான் அப்ரூவல் வழங்கியதை லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய 'ரெய்டில்' கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிளான் அப்ரூவல் பெற வந்தனர். தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, சிவகங்கை மாவட்டத்திற்கான அலுவலகமாக அரசு மாற்றி உத்தரவிட்டது. காரைக்குடி, திருப்புத்துாரில் ரியல் எஸ்டேட் செய்வோர், பிளான் அப்ரூவல் வாங்க அதிகம் பேர் வருகின்றனர். அவர்களிடம் இங்குள்ள சில அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை பிளான் அப்ரூவலுக்கு பல லட்ச ரூபாய் வரை பெறுவதாக புகார் எழுந்தது.
ஒரே டேபிளில் சிக்கிய ரூ.1 லட்சம்: விதிமுறைகளை மீறி, ரோடு, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாத பிளாட்களுக்கும் அப்ரூவல் வழங்கி முறைகேடு செய்துள்ளனர். இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் சென்றது. நேற்று முன்தினம் 'ரெய்டு' நடத்தினர். அதில், உதவி இயக்குனர் அறையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர். தொடர்ந்து மற்ற ஊழியர்களிடம் விசாரணை செய்து, யார் யாருக்கு விதிமுறைகளை மீறி பிளான் அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட்காரர்களிடம் அதிகாரி முதல் ஊழியர்கள் வரை எவ்வளது பணம் பெற்றனர் என்பதை அறிய முக்கிய ஆவணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE