சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் அரசுப் பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் 'கட்' செய்யப்பட்டதால், சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் துாய்மை பணி மேற்கொள்ள ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். துவக்கப்பள்ளிகளை சுத்தம் செய்ய ரூ.1000, நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.1500, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1750, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ. 2000 என மாத ஊதியம் வழங்ப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை நிதியைக்கொண்டு பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் இந்த ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.கொரோனா தொற்று பரவி, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் கடந்த ஏப்ரல் முதல் துாய்மை பணியாளர்களுக்கான சம்பளத்தை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.
அதே நேரம் பள்ளிகள் திறக்காவிட்டாலும் ஆசிரியர்களும், அலுவலர்களும் பள்ளிக்கு வந்து செல்வதால், அவர்கள் சம்பளம் இல்லாமல் தொடர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள் திறக்காதது மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாகவே அவர்களுக்கு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE