நத்தம் : நத்தம் பகுதியில் விலை சரிவடைந்துள்ளதால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் வாழை அதிகம் பயிர் செய்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் கொரோனா ஊரடங்கால் வாழை கமிஷன் கடைகள் மூடப்பட்டன. இதானல் வாழை இலை மற்றும் காய்களை அறுவடை செய்ய முடியாமல் வயல்களிலேயே விடும் சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் கடைகள் செயல்பட துவங்கின. அதேசமயம் திருவிழாக்கள், விேஷசங்களுக்கு கட்டுப்பாடு இருந்ததால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
முகூர்த்த நாட்களில் ஒரு கட்டு ரூ.700 முதல் 900 வரை விற்பனையானது.கடந்த சில நாட்களாக சுப முகூர்த்தங்கள் இல்லாததால் மீண்டும் விலை சரிவடைந்து ரூ.250 முதல் 400 வரை விற்பனையாகிறது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மீண்டும் முகூர்த்தம் வரும்போது விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE