தேவகோட்டை : தேவகோட்டை அழகாபுரி வடக்குத்தெருவை சேர்ந்த மணி மகன் வீரசிங்கம். 28 ; இவர் கறிக் கடையில் பணியாற்றினார்.
டிச.20ம் தேதி அதிகாலை வேலைக்கு சென்றவர் மதியம் வீட்டிற்கு வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.வீரசிங்கத்தின் சகோதரி வள்ளி போலீசில் புகார் செய்தார். டிச. 23 ம் தேதி திருப்புத்துார் அருகே கருப்பூர் ரோட்டில் சிறு காயங்களுடன் விஷபாட்டிலுடன் கிடந்துள்ளார். உயிருக்கு போராடிய வீரசிங்கத்தை சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்தார். மரணத்திற்கான இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE