கள்ளிமந்தையம் : 'ஒட்டன்சத்திரம் மற்றும் பழநியில் இருந்து அப்பியம்பட்டிக்கு இயக்கப்பட்ட 2 அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து கள்ளிமந்தையம், நால்ரோடு, அப்பியம்பட்டி வழியாக மோதுபட்டி வரை ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் பழநியில் இருந்து தொப்பம்பட்டி, தும்பலப்பட்டி, திருவாண்டபுரம், அப்பிபாளையம், பாலப்பன்பட்டி வழியாக அப்பியம்பட்டிக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது.பழநியிலிருந்து இயங்கிய பஸ்சால், விவசாய தொழிலாளர்கள் பலருக்கும் வசதியாக இருந்தது. இதே போல் ஒட்டன்சத்திரத்துக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல மோதுப்பட்டி வரை இயக்கப்பட்ட பஸ் உதவியாக இருந்தது.
இவற்றை நிறுத்தியதால் பலகிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரண்டு டவன் பஸ்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக ஆர்வலர் கந்தசாமி கூறுகையில், ''டவுன் பஸ்களால் சாதாரண, ஏழை எளியவர்கள் பயனடைந்தனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE