அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவல்லிக்கேணியில் உதயநிதி போட்டி? சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அத்தொகுதியில் போட்டியிட, மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் விரும்புவதால், சொந்த கட்சியிலேயே உதயநிதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சென்னை நகரில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன்
Udhayanidhi Stalin, Udhayanidhi, DMK

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அத்தொகுதியில் போட்டியிட, மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் விரும்புவதால், சொந்த கட்சியிலேயே உதயநிதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை நகரில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன் இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின், தற்போது, அத்தொகுதி காலியாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அத்தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியினர் விரும்புகின்றனர்.

பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் ஓட்டுக்கள் நீக்குவது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை, உதயநிதி தரப்பினர் முடுக்கி விட்டுள்ளனர். மதன் தலைமையில், சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள், உதயநிதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என, களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


ஆனால், மாவட்ட நிர்வாகி ஒருவர், மறைந்த முன்னாள் அமைச்சர் வாரிசை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை, திரைமறைவில் செய்து வருகிறார். அதேபோல, திருவல்லிக்கேணியை சேர்ந்த பகுதி நிர்வாகி ஒருவர், இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என, ஒற்றைக்காலில் நிற்கிறார்.

உதயநிதி போட்டியிடுகிறார் என, அத்தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்த பின்னும், மாவட்ட நிர்வாகி, தன் ஆதரவாளரை நிறுத்த முயற்சிப்பதும், பகுதி நிர்வாகி, தாம் போட்டியிட விரும்புவதும், கட்சிக்கு செய்கிற துரோகம் என, குற்றம் சாட்டுகின்றனர்.

தங்களுக்கு தொகுதி கிடைக்காத ஏமாற்றத்தினால், போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், உதயநிதிக்கு எதிராக, திரைமறைவில் உள்குத்து வேலைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
30-டிச-202012:43:47 IST Report Abuse
sridhar இது தான்யா குடும்ப அரசியல் அத எப்படி விட்டுக்கொடுக்க முடியும் எல்லாம் முடிந்த பிறகு மிச்சம் மீதி இருந்தால் எடுத்துக்குங்க வேண்டாம்ன்னு போங்க
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
26-டிச-202023:51:00 IST Report Abuse
Truth Triumph திமுக வை நிராகரிப்போம் ... வேரறுப்போம் ...வேரடிமண்ணோடு ...மக்களை அராஜகத்திடம் இருந்து காப்போம் ... அதன் ஆதரவாளர்கள் அதற்க்கு வாக்களித்தவர் வாக்களிக்க எண்ணுபவர் எல்லோரும் மக்கள் விரோத சக்திகள் என்று குரல் கொடுப்போம் அதன் கொடி அதை சுமந்து வரும் வாகனங்கள் அதில் பயணம் செய்வோர் மொத்தத்தில் திமுக என்றாலே அருவறுப்பாக இருக்கிறது ... இப்படியும் இழி பிறவிகள் இருப்பது பூமிக்கு பாரம் ...இந்த பாவிகளை இனியும் சுமக்க வேண்டுமா? தேவனே ...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
26-டிச-202022:13:32 IST Report Abuse
Vijay D Ratnam உதயநிதி எதுக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டும். இருக்கவே இருக்கு அறிவார்ந்த வாக்காள பெருமக்கள் நிறைந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி. கருணாநிதி போட்ட பழைய செருப்பை நிறுத்திவைத்தால் கூட ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியசத்தில் ஜெயிக்கலாம்.. ரிசர்வ் தொகுதியாக இருந்த திருவாரூரை பொது தொகுதியாக மாற்றி அருகிலே புதிதாக கீவளூர் என்ற தொகுதியை உருவாக்கி அதை ரிசர்வ் தொகுதியாக்கினார் கருணாநிதி. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக மரண அடி வாங்கிய போதும் கருணாநிதி ஐம்பதாயிரத்துக்கு மேல் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016 தேர்தலில் சுத்தமாக செயல்பட முடியாமல், பேசமுடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த போதும் ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உதயநிதி அங்கு நிற்பது சேஃப்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X