பொது செய்தி

தமிழ்நாடு

பொருட்களை பாதுகாக்க வீட்டுக்குள் 'லாக்கர்' வைக்கலாம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த நகை, விலை உயர்ந்த பொருட்ளை, வீட்டில் பாதுகாப்பது ஒரு சவாலான விஷயம் தான். வங்கி லாக்கர்களில் பொருட்களை வைத்து பாதுகாத்தாலும் வீட்டிலேயே வைக்க கூடிய அளவிற்கு பல்வேறு லாக்கர்கள் சந்தையில் கிடைக்கிறது.வீட்டில் லாக்கர் பொருத்தலாம் வீட்டில் லாக்கர் வைப்பதால் நம் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில், பாதுகாப்பில் இருக்கும். இதற்காக

நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த நகை, விலை உயர்ந்த பொருட்ளை, வீட்டில் பாதுகாப்பது ஒரு சவாலான விஷயம் தான். வங்கி லாக்கர்களில் பொருட்களை வைத்து பாதுகாத்தாலும் வீட்டிலேயே வைக்க கூடிய அளவிற்கு பல்வேறு லாக்கர்கள் சந்தையில் கிடைக்கிறது.வீட்டில் லாக்கர் பொருத்தலாம் வீட்டில் லாக்கர் வைப்பதால் நம் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில், பாதுகாப்பில் இருக்கும். இதற்காக பலவித லாக்கர்களை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கி வீட்டில் பொருத்தி கொள்ளலாம்.

வீட்டில் எந்த இடத்தில் லாக்கர் வர வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். பின் நமக்கு தேவையான மாடல், அளவுள்ள லாக்கரை வாங்க வேண்டும்.நம்பகமான கட்டுமான பணியாளர்களை அழைத்து வீட்டில் லாக்கர் வைக்க வேண்டிய தளத்தில் பள்ளம் ஏற்படுத்தி லாக்கரை அதில் பதித்து வைக்கலாம். வீட்டிற்கு தேவையான லாக்கரை தேர்வு செய்வதில் சில முறைகளை பின்பற்ற வேண்டும்.எடை அதிகமான லாக்கர் லாக்கரில் எந்த மாதிரி பூட்டை தேர்வு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளது. பொதுவாக சாவி போட்டு திறக்கும் லாக்கர்கள் உள்ளன.

விலை உயர்ந்த லாக்கர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதாவது எலெக்ட்ரானிக் கீ பேட், ஸ்வைப் கார்டு மற்றும் விரல் ரேகை பதிவு அடிப்படையில் செயல்பட கூடியவையும் உள்ளன.இது போன்ற டிஜிட்டல் லாக்கர்கள் வழக்கமான சாவி போட்டு திறக்கும் லாக்கரின் விலையை விட அதிகமாக தான் இருக்கும். இதில் லாக்கரின் எடை குறித்து அவசியம் கவனிக்க வேண்டும். அதன் எடை அதிகமாக இருப்பது நல்லது. எடை அதிகம் இருந்தால் அதை உடைக்க முடியாது.கண்காணிப்பு கேமரா அவசியம் வீடு கட்டி பின் லாக்கர் வைக்கும் இடத்தை திட்டமிடுவதை விட வீடு கட்டும் போதே திட்டமிட்டு அதற்கான அமைப்பை ஏற்படுத்தினால் வசதியாக இருக்கும்.

வீடு கட்டும்போதே லாக்கர் வைக்கும் இடத்தை திட்டமிட்டு யார் கண்களிலும் படாமல் இருக்கும்படி அமைப்பது அவசியம். லாக்கரை தரைதளம், உள் அறைகளுக்கு இடையிலான பக்கவாட்டு சுவற்றில் பதிக்கலாம்.தீ விபத்து நடந்தாலும் பாதிக்காத வகையில் பாதுகாப்பான லாக்கரும் உள்ளன. இதை வாங்கினால் முக்கியமான ஆவணங்களையும் இதில் வைத்து பாதுகாக்க முடியும். வீட்டினுள் லாக்கரை வைக்க தீர்மானித்து விட்டால் கண்காணிப்பு கேமரா, அலாரம் உள்ளிட்ட சில பாதுகாப்பு அம்சங்களிலும் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய முடியும் வங்கி லாக்கரில் உள்ள விலை உயர்ந்த பொருட்ள்கள் திருடு போனால் வங்கிகள் பொறுப்பேற்காது. ஆனால், வீட்டில் பொருத்தும் லாக்கருக்கு நீங்கள் காப்பீடு செய்ய முடியும். அதிக நாட்கள் பூட்டிய வீட்டிற்குள் இருக்கும் லாக்கரில் திருடு போனால் காப்பீடு கிடைக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில் வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானதாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X