சிவகங்கை : அதப்படக்கி பெருங்கரை கண்மாய் நிறைந்து தரைப்பாலத்தில் வெளியேறுவதால் மறவமங்கலம்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதப்படக்கி பெருங்கரை கண்மாய் நிறைந்து கழுங்கு வழியாக வெளியேறும் நீர் கண்டனி கண்மாய்க்கு செல்கிறது. வெளியேறும் உபரி நீர் மறவமங்கலம் ரோட்டில் அதப்படக்கி விலக்கு அருகே தரைப்பாலத்தில் கடந்து செல்கிறது. இதில் அதிகளவில் வெள்ளம் செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.மழை சீசன்களில் தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் ரோட்டில் பாசி படர்ந்து டூவீலரில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். இங்கு மேம்பாலம் அமைத்தால் உபரி நீர் செல்வதுவாகனப்போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். அதப்படக்கி ஊராட்சி தலைவர் மகேஸ்வரி கூறியதாவது, அதப்படக்கி விலக்கு அருகில் தரைப்பாலத்தில் தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் அப்பகுதியில் பாசி படர்ந்து வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். இங்கு மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE