பொது செய்தி

தமிழ்நாடு

1000 சதுர அடி வீட்டில் 5000 லிட்டர் மழைநீரை சேமிக்கலாம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்ற ஆறுதல் இருந்தாலும் நீர் ஆதாரங்களில் நிரம்பாமல் வீணாக போன மழைநீர் குறித்து கவனிக்க வேண்டும். அந்த வகையில் வீடுகளில் மழைநீரை எப்படி சேமிக்கலாம் என தெரிந்து கொள்வோம். 5000 லிட்டர் மழைநீர் சேமிப்பு ஏ.டி.எம்.,ல் பணம் டெபாசிட் செய்து தேவைக்கு பயன்படுத்துவது போல் கிடைக்கும் மழைநீரை பூமிக்கு அடியில்

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்ற ஆறுதல் இருந்தாலும் நீர் ஆதாரங்களில் நிரம்பாமல் வீணாக போன மழைநீர் குறித்து கவனிக்க வேண்டும். அந்த வகையில் வீடுகளில் மழைநீரை எப்படி சேமிக்கலாம் என தெரிந்து கொள்வோம்.

5000 லிட்டர் மழைநீர் சேமிப்பு ஏ.டி.எம்.,ல் பணம் டெபாசிட் செய்து தேவைக்கு பயன்படுத்துவது போல் கிடைக்கும் மழைநீரை பூமிக்கு அடியில் செலுத்தி தேவைக்கு பயன்படுத்த வேண்டும். மழை நீரை நேரடியாக பூமிக்குள், வடிகட்டி கிணற்றில், ஆழ்குழாய்க்குள் செலுத்துவது, தொட்டியில் சேகரித்து குடிநீராக்குவது, உபரி நீரை ஆழ்குழாய் கிணற்றில் செலுத்துதல் ஆகிய முறைகளில் சேமிக்கலாம். முதல் இரண்டு முறை பயன்பாட்டில் உள்ளது. மூன்றாம் முறையில் நகர்புற குடிநீர் பற்றாக்குறை தீர்க்கலாம்.மழைநீர் சேகரிப்பதால் வெள்ளம் ஏற்படுவதை தடுத்து, தண்ணீர் தேங்காமல் பாதுகாக்கலாம். நம் முன்னோர்கள் மழைநீரை வடிகாலில் பிடித்து, கலன்களில் சேகரித்து வடிகட்டி, காயவைத்து, பல மாதங்கள் குடித்தனர்.

இன்று நகர்ப்புறங்களில் 1000 சதுரடி வீட்டில் 5 செ.மீ., மழை பெய்தால் 5000 லிட்டர் வரை சேகரிக்கலாம்.மொட்டை மாடி சேமிப்பு மொட்டைமாடி ஏரியாவை நீர்சேரிப்பு பகுதியாக மாற்றினால் சுத்தமான, வேதிப்பொருள் கலக்காத நீர் கிடைக்கும். தரைத்தள தொட்டியில் பில்ட்ரேஷன் முறையில் வடிகட்டி சேமித்து குடிக்க, சமைக்க பயன்படுத்தலாம்.உதாரணமாக 5 பேர் உள்ள வீட்டிற்கு ஆண்டுக்கு 11000 லிட்டர் குடிநீர் தேவை. (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 6 லி. வீதம்) சராசரி மழை அளவு ஆண்டிற்கு 98 செ.மீ. 8க்கு 4 அடி அகலத்தில் 6 அடி உயரமுள்ள தொட்டியில் இரண்டு முறை மழைநீர் சேமித்தால் ஆண்டு முழுவதும் வீட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.கேன் வாட்டர் செலவு மிச்சம் பாயிலிங், யூ.வி., மூலம் மழைநீரை சுத்திகரிக்கலாம்.

உபரி மழைநீரை ஆழ்குழாயில் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் கூடுவதுடன் தரமான, சுவையான தண்ணீர் கிடைக்கும். கேன் வாட்டர் செலவை குறைத்து 100 லிட்டர் மழை நீரில் 70 லிட்டர் குடிநீரை எடுக்கலாம்.மழைநீரில் பி.எச். 7 ஆகவும், உப்பின்அளவு குறைவாகவும் உள்ளது. இதை பயன்படுத்தும் போது பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். குறிப்பாக சில நாட்களுக்கு உணவு கெடாது., டிடர்ஜென்ட் சோப் 50 சதவீதம் அளவு சேமிக்கலாம். கொதி காலம் குறைகிறது, உடல் நலமாகும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கும்.வீட்டு தோட்டம் அவசியம் காடுகளை அழிப்பது, அதன் நீர்பிடிப்பு பகுதிகளை குறைப்பதால் மழைநீர் சேமிப்பின் அளவு குறைந்து தேவை அதிகரிக்கிறது. உதாரணமாக 1 எக்டேர் காட்டில் 6 - 7 லட்சம் டன் மழை நீரை பில்டர் செய்த பின் அதன் மேல் பகுதி 1.2 லட்சம் டன் சுத்தமான நீரை வைத்திருக்கும். ஒரு மரம் 10 நபர்கள் ஒரு ஆண்டு வரை சுவாசிக்க கூடிய ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது.

நம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும். அதே போல் வீடுகளில் சிறு தோட்டம் அமைத்து பசுமை சூழலை ஏற்படுத்தலாம். மரம், செடி, கொடிகள் மழைநீரை உள் வாங்கி நிலத்திற்கு செலுத்தும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும்.- ஜெ.வெங்கட்ராமன்பொறியாளர், மதுரை 98948 81771

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X